Breaking News

வரலாற்றில் இன்று-04-08-2020

வரலாற்றில் இன்று-04-08-2020




முக்கிய நிகழ்வுகள் :-

👉 1929ஆம் ஆண்டு ஆகஸ்ட் 4ஆம் தேதி தமிழக மிருதங்க கலைஞர் வேலூர் ஜி.ராமபத்ரன் பிறந்தார்.

👉 1935ஆம் ஆண்டு ஆகஸ்ட் 4ஆம் தேதி தமிழக எழுத்தாளர் நா.தர்மராஜன் பிறந்தார்.

👉 2007ஆம் ஆண்டு ஆகஸ்ட் 4ஆம் தேதி நாசாவின் பீனிக்ஸ் (Phoenix) விண்கலம் செவ்வாய்க்கோளை நோக்கி ஏவப்பட்டது.

👉 2008ஆம் ஆண்டு ஆகஸ்ட் 4ஆம் தேதி உலகளவில் மொழியியல் துறையில் புகழ்பெற்ற தமிழறிஞர் ச.அகத்தியலிங்கம் மறைந்தார்.



முக்கிய தினம் :-

சர்வதேச நண்பர்கள் தினம்

👪 அமெரிக்க காங்கிரஸ் 1935ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் ஞாயிற்றுக்கிழமை உருவானது. இதனை தேசிய நட்பு தினமாக அமெரிக்காவில் கொண்டாடப்பட்டது.

👪 பிறகு அது மிகப்பெரிய திருவிழாவாகக் கொண்டாடப்பட்டது. நண்பர்கள் தினம் அமெரிக்காவை ஒட்டிய நாடுகளுக்குப் பரவியது. அதை தொடர்ந்து உலகம் முழுவதும் பரவி, தற்போது உலகம் முழுவதும் இத்தினம் கொண்டாடப்படுகிறது.

பிறந்த நாள் :-

பாரக் ஒபாமா

👉 அமெரிக்க முன்னாள் அதிபர் பாரக் ஒபாமா 1961ஆம் ஆண்டு ஆகஸ்ட் 4ஆம் தேதி அமெரிக்காவிலுள்ள ஹவாயில் பிறந்தார்.

👉 இவர் 2008ஆம் ஆண்டு அரசுத்தலைவர் தேர்தலில் மக்களாட்சி கட்சி வேட்பாளராகப் போட்டியிட்டு வெற்றி பெற்றார். நவம்பர் 6, 2012ஆம் ஆண்டு நடந்த அதிபர் தேர்தலில் மீண்டும் அதிபர் ஆனார்.



👉 அதிபராவதற்கு முன் இவர் அமெரிக்க நாடாளுமன்ற மேலவையில் (செனட்) இலினொய் மாநிலத்தின் சார்பில் இளைய உறுப்பினராகப் பணியாற்றினார். 

👉 அமெரிக்க வரலாற்றில் ஆப்பிரிக்க அமெரிக்க இனத்தைச் சேர்ந்த முதலாவது குடியரசுத் தலைவர் என்ற பெருமைக்குரிய இவர் தனது 58வது வயதில் அடியெடுத்து வைக்கிறார்.

No comments