Breaking News

சான்றிதழ் பதிவேற்றம் செய்ய இன்று கடைசி நாள்

சான்றிதழ் பதிவேற்றம் செய்ய இன்று கடைசி நாள்
அரசு கலை கல்லூரி மாணவர் சேர்க்கை : சான்றிதழ் பதிவேற்றம் செய்ய இன்று கடைசி நாள்.

கொரோனா தொற்று காரணமாக அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேருவதற்கான விண்ணப்பப்பதிவு இந்த ஆண்டு ஆன்லைனில் நடைபெறும் என்று உயர் கல்வித்துறை அறிவித்தது . 

அதன்படி , விண்ணப்பப்பதிவு கடந்த மாதம் ( ஜூலை ) 20 - ந் தேதி தொடங்கி 31 - ந் தேதி வரை நடைபெற்றது . 109 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உள்ள 92 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடங்களுக்கு சுமார் 3 லட்சத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்ப பதிவு செய்திருந்தனர் . 

இந்தநிலையில் ,மாணவர்கள் தங்களுடைய மதிப்பெண் பட்டியலை பதிவேற்றம் செய்வதற்கு காலஅவகாசம் வழங்க கோரிக்கை விடுத்தனர் . அதனை ஏற்று , சான்றிதழ்களை பதிவேற்றம் செய்ய இன்று ( திங்கட்கிழமை ) வரை அவகாசம் வழங்கப்பட்டு இருந்தது . 

எனவே , இதுவரை சான்றி தழ்களை பதிவேற்றம் செய்யாத மாணவர்கள் இன்று அதை செய் துகொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது .

No comments