Breaking News

பியூட்டி பார்லர் செல்லாமலே முகப்பொலிவு பெற உதவும் ஏழு இயற்கை வழிமுறைகள்

பியூட்டி பார்லர் செல்லாமலே முகப்பொலிவு பெற உதவும் ஏழு இயற்கை வழிமுறைகள்
 தற்போது இளைஞர்களிடையே அதிகமாக தங்களை அழகுப்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கி இருந்து வருகின்றது.  அதைப் பயன்படுத்தி பல கார்ப்பரேட் நிறுவனங்கள் புதுப்புது கிரீம், சோப்புகள் என அறிமுகப்படுத்தி கொள்ளை லாபத்தை ஈட்டி வருகின்றன.ஆனால் அதில் பெரும்பாலும் ஏமாற்றமே மிஞ்சுகிறது நம் அனைவருக்கும் இயற்கையாகவே முகம் பொலிவுடன் இருந்தாலும் கூட புகை, காற்றில் உள்ள நச்சுப் பொருட்கள், உணவு முறைகள் , மனக்கவலைகள் ஆகியவை முகத்தினை பொலிவற்ற தாக்கி விடுகின்றனர்.

       இந்த பதிவில் கூறப்பட்டிருக்கும் 7 இயற்கை வழிமுறைகளைப் பயன்படுத்தி வீட்டில் இருந்தபடியே எந்த ஒரு பக்கவிளைவும் இல்லாமல் , குறைந்த செலவில், 100% உத்தரவாதத்துடன் நீங்கள் முகப் பொலிவினைப் பெறலாம்.

ஏழு வழிமுறைகள்

எலுமிச்சை சாறு

       எலுமிச்சையில் உள்ள சிட்ரிக் அமிலம் தோலினில் உள்ள இறந்த செல்களை புதுப்பிக்கும் தன்மை உடையது. ஆதலால் எலுமிச்சை சாறினை கொஞ்சம் சர்க்கரை சேர்த்து முகத்தில் தடவி 15 நிமிடம் கழித்து, இதமான நீரில் முகம் கழுவ முகம் பொலிவு பெறும்.

வெள்ளரி

     வெள்ளரியினை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி சிறிது நேரம் முகத்தில் வைத்து எடுப்பதால் முகம் குளிர்ச்சி அடைந்து பொலிவினைப் பெறும்.



கடலை மாவு

     கடலைமாவுடன் பால் அல்லது நீரில் கலந்து முகத்தில் தடவி உலர்ந்த பின்னர் இதமான நீரில் கழுவினால் முகம் பொலிவினைப் பெறும்.

தேன் மற்றும் பன்னீர்

     தேனில் இருக்கக்கூடிய உட்பொருட்கள் ஈரப்பதத்தை தக்க வைக்கும் தன்மை உடையது. ஆதலால் தேனுடன் பன்னீர் கலந்து முகத்தை கழுவினால் முகம் பொலிவடையும்.

கற்றாழை

      கற்றாழையில் உள்ள மருத்துவ குணங்கள் முகப் பருக்கள், தழும்புகளை நீக்கி சருமம் மிருதுவாக துணைபுரிகிறது. கற்றாழை சாறினை கண்களில் படாமல் முகத்தில் தேய்த்து, சிறிது நேரம் கழித்து முகத்தை கழுவினால் முகம் பொலிவடையும்.



தயிர் மற்றும் முட்டை

     முகம் பொலிவு பெற இந்த முறை பரவலாக பயன்படுத்தப்படுகிறது. தயிருடன் முட்டையின் வெள்ளைக்கருவை கலந்து முகத்தில் தடவி சிறிது நேரம் கழித்து முகம் கழுவவும் சருமம் ஆரோக்கியம் பெற்று பொலிவடைகிறது.

ஓட்ஸ் மற்றும் தயிர்

     ஓட்ஸ் மற்றும் தயிரை கலந்து முகத்தில் தடவி சிறிது நேரம் கழித்து முகம் கழுவ முகம் பொலிவு பெறும்.

No comments