Breaking News

மாணவர்களுக்கான கல்வி கற்கும் திறனை அதிகரிப்பதற்கான வழிகாட்டி விதிமுறை மத்திய அரசு வெளியீடு

மாணவர்களுக்கான கல்வி கற்கும் திறனை அதிகரிப்பதற்கான வழிகாட்டி விதிமுறை மத்திய அரசு வெளியீடு
      மாணவர்களுக்கான கல்வி கற்கும் திறனை அதிகரிப்பதற்கான வழிகாட்டி விதிமுறைகளை மெய்நிகர் நிகழ்ச்சி மூலமாக புதுதில்லியில் மத்திய கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் நிஷாங்க் வெளியிட்டார்.

      இந்நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் கோவிட்-19 பெருந்தொற்று காலத்திலும், கல்வி அமைச்சகத்தின் கீழ் செயல்படும் கல்வி அமைப்புகளும், அமைச்சகமும் இணைந்து செயல்பட்டு குழந்தைகளுக்கு பள்ளிக்கல்வி அவர்களது இல்லங்களிலேயே டிஜிட்டல் தளங்கள் மூலமாக கிடைக்க முயற்சிகள் எடுத்துள்ளனர் என்று கூறினார். 

        மாற்று அகடமிக் கேலண்டர்; பிரகியதா வழிகாட்டுதல்கள்; டிஜிட்டல் கல்வி- இந்தியா அறிக்கை; நிஷ்த ஆன்லைன் போன்ற முயற்சிகள் உட்பட பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு, குழந்தைகளுக்கு பள்ளிக்கல்வி தொடர்ந்து கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. மாற்று வழிகள் மூலமாக மாணவர்களுக்குப் பள்ளிக்கல்வி கிடைக்க முயற்சிகளை மேற்கொள்ளும் அதே சமயத்தில், பல்வேறு பங்குதாரர்களிடமிருந்து டிஜிட்டல் ஆதாரங்கள் மூலமாக படிக்க இயலாத நிலையில் உள்ள குழந்தைகளின் கல்வி குறித்து கேள்விகள் எழுப்பப்பட்டன. 

   டிஜிட்டல் ஆதாரங்கள் மூலம் பள்ளிக்கல்வியை இல்லங்களில் இருந்தபடியே பெறுவதற்கு சம அளவு வாய்ப்பு இல்லை என்பதால், குழந்தைகள் கல்வி கற்பதில் சமத்துவம் இல்லாது போகலாம்; அனைத்துக் குழந்தைகளுக்கும் கல்வி கிடைக்காமல் போகலாம்; இதனால் குழந்தைகளுக்கு கற்பதில் குறைபாடுகள் ஏற்படலாம் என்றும் கவலை தெரிவிக்கப்பட்டது. 

     இவை அனைத்தையும் கருத்தில் கொண்டு மத்திய கல்வி அமைச்சகத்தின் வழிகாட்டுதலின்படி என்சிஇஆர்டி மாணவர்களுக்கான கல்வி கற்கும் திறனை அதிகரிப்பதற்கான வழிகாட்டி விதிமுறைகளைத் தயாரித்துள்ளது இந்த விதிமுறைகள் தற்போதைய சூழலுக்கும், கோவிட்டுக்குப் பிந்தைய சூழலுக்கும் ஏற்ற வகையில் ஏற்படுத்தப்பட்டுள்ளன. 

  இந்த வழிகாட்டு நெறிமுறைகள், மாதிரிகள் மூன்று விதமான நிலைமைகளுக்குப் பொருந்தக்கூடிய வகையில் தயாரிக்கப்பட்டுள்ளன முதலாவதாக டிஜிட்டல் ஆதாரங்களைப் பெற வழியே இல்லாத குழந்தைகள்; இரண்டாவது - குறிப்பிட்ட அளவிலான டிஜிட்டல் ஆதாரங்களே உள்ள குழந்தைகள்; மூன்றாவது - இணைய வழியில் கல்வி கற்க தேவையான மின்னணு ஆதாரங்கள் உள்ள குழந்தைகள். பணிப் புத்தகங்கள், பணித்தாள்கள் போன்ற கல்வி தொடர்பான சாதனங்களைப் பெறுவதற்கு சமுதாயமும் பள்ளிகளும் நெருக்கமாக இணைந்து செயல்பட வேண்டும் என்று இந்த வழிகாட்டி விதிமுறைகள் வலியுறுத்துகின்றன என்று அமைச்சர் கூறினார். 

   இந்தப் பொருள்கள் மாணவர்களுக்கு ஆசிரியர்கள், தன்னார்வலர்கள் மூலமாக மாணவர்களது வீடுகளிலேயே வழங்கப்படுவதற்கு வகை செய்கிறது. சமுதாய மையங்களில் சமூக விலகியிருத்தல் விதிமுறைகளைக் கடைப்பிடித்து, தொலைக்காட்சியை உபயோகித்து ஆசிரியர்கள் அல்லது தன்னார்வலர்கள் மூலமாக உள்ளூர் மாணவர்களுக்குக் கற்றுத் தரலாம் என்ற ஆலோசனையையும் அது வழங்கியுள்ளது. 

  சமுதாய மையங்களில், சமுதாய உறுப்பினர்கள் பஞ்சாயத்து ராஜ் உறுப்பினர்கள் உதவியுடன் உதவி தொடர்பு எண் ஒன்றை அமைப்பது குறித்தும் இந்த விதிமுறைகள் ஆலோசனை கூறுகின்றன என்றும் பொக்ரியால் கூறினார் மாணவர்கள் கல்வி கற்பதில் பெற்றோர்கள் பங்குபெறுவது; மாணவர்களுக்கு கல்வி கற்க பெற்றோர்கள் ஆதரவளிப்பது; இதற்காக பெற்றோர்களுக்குப் பயிற்சி அளிப்பது; ஆகியவற்றையும் இந்த விதிமுறைகள் பரிந்துரைத்துள்ளன. 

  மூன்று விதமான சூழல்களிலும் மாற்று கல்வி அட்டவணையைப் பயன்படுத்துமாறு ஆலோசனை தெரிவிக்கப்பட்டுள்ளது. என்சிஇஆர்டி எடுத்துள்ள ஆய்வுகளின் அடிப்படையில் இந்த வழிகாட்டு விதிமுறைகள் வரையறுக்கப்பட்டுள்ளன. கேந்திரிய வித்யாலயா சங்கதன், நவோதயா வித்யாலயா சமிதி, உயர் கல்விக்கான மத்திய வாரியம் ஆகியவற்றில் டிஜிட்டல் ஆதாரங்களைப் பெறக்கூடிய நிலை; மத்திய கல்வி அமைச்சகம், மாநிலங்கள்/ யூனியன் பிரதேசங்களுக்காக் தயாரித்த தொடர் கல்வி திட்டம் ஆகியவை பற்றி மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் அடிப்படையிலும் இவை வரையறுக்கப்பட்டுள்ளன.

No comments