Breaking News

உடல் பருமன் மற்றும் தொப்பையை குறைக்க நம் முன்னோர்களின் பாரம்பரிய முறை

உடல் பருமன் மற்றும் தொப்பையை குறைக்க நம் முன்னோர்களின் பாரம்பரிய முறை
        இன்றைய காலகட்டத்தில் பலர்போதுமான உழைப்பு உடல் உழைப்பு இல்லாததால் உடல் பருமன் மற்றும் தொப்பை ஏற்பட்டு பல பிரச்சனைகளை சந்தித்து வருகின்றனர்.உடல் பருமனையும் தொப்பையை குறைப்பதற்காக ஆங்கில மருந்துகளை பயன்படுத்தி பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர்.



            அந்த வகையில் இன்று நாம் பார்க்க இருக்கும், உடல் பருமன் மற்றும் தொப்பையை குறைக்கும் முறையானது பல தலைமுறைகளாக நம் முன்னோர்கள் கையாண்டு பலனை பெற்ற எளிய வழி முறையாகும். உடல் பருமன் மற்றும் தொப்பையை குறைப்பதற்காக நம்முன்னோர்கள் வாழைத்தண்டு சாறு பருகி நலம் பெற்று வந்துள்ளனர்.

        வாழைத்தண்டு சாறு சாப்பிடுவதால் உடல் ஆரோக்கியத்துடனும் அதே நேரத்தில் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பு மற்றும் சர்க்கரையின் அளவு குறைந்துவிடுகிறது. வாழைத்தண்டுகளில் உள்ள நார்ச்சத்து உடலுக்கு ஆரோக்கியத்தை வழங்குகிறது மேலும் பசியின்மையை ஏற்படுத்துகிறது 



     மேலும் வாழைத்தண்டுசாறு கல்லடைப்புக்கு உத்தரவாதத்துடன் கூடிய சிறந்த மருந்தாகும். 

        சரி இனி வாழைத்தண்டு ஜூஸ் தயாரிப்பது எப்படி என்று பார்க்கலாம். 

தேவையான பொருள்கள்

 வாழைத்தண்டு, எலுமிச்சை பழம், உப்பு



செய்முறை

      வாழைத் தண்டினை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி சிறிதளவு நீரில் 10 நிமிடம் ஊற வைக்க வேண்டும். அதன் பின்னர் வாழைதண்டினை மிக்ஸியில் போட்டு அரைத்து வடிகட்டிக் கொள்ளவேண்டும். அதனுடன் எலுமிச்சை சாறினை பிழிந்து சிறிதளவு உப்பு கலந்து பருக வேண்டும். ஒரு நாளைக்கு இரண்டு அல்லது மூன்று முறை இந்த சாறினை பருகலாம்.
       ஆனால் சாறினை தயாரித்த உடன் பருக வேண்டும். சில நாட்களுக்குள் உங்களுக்கு வித்தியாசம் தெரிய ஆரம்பிக்கும். எந்த ஒரு பக்க விளைவுகளும் இல்லாத இயற்கையான ஆரோக்கியமான வழிமுறை ஆகும்.

No comments