Breaking News

தங்கம் விலை மீண்டும் உயர்வு

தங்கம் விலை மீண்டும் உயர்வு
  தமிழகத்தில், ஒரு வாரத்திற்கு பின், ஆபரண தங்கம் விலை, மீண்டும் அதிகரித்துள்ளது.சர்வதேச நிலவரங்களால், தங்கம் விலை அபரிமிதமாக உயர்ந்த நிலையில், இம்மாதம், 8ம் தேதி முதல் குறைய துவங்கியது.

  தமிழகத்தில், நேற்று முன்தினம், 22 காரட் ஆபரண தங்கம், 1 கிராம், 5,076 ரூபாய்க்கும்; சவரன், 40 ஆயிரத்து, 608 ரூபாய்க்கும் விற்பனையானது. 1 கிராம் வெள்ளி, 76.40 ரூபாய்க்கு விற்கப்பட்டது.ஒரு வாரத்திற்கு பின் நேற்று, தங்கம் கிராமுக்கு, 24 ரூபாய் உயர்ந்து, 5,100 ரூபாய்க்கும்; சவரனுக்கு, 192 ரூபாய் அதிகரித்து, 40 ஆயிரத்து, 800 ரூபாய்க்கும் விற்கப்பட்டது. வெள்ளி கிராமுக்கு, 1.30 ரூபாய் குறைந்து, 75.10 ரூபாய்க்கு விற்பனையானது.

No comments