Breaking News

24 போலி பல்கலைக்கழகங்கள் கண்டுபிடிப்பு யு.ஜி.சி

24 போலி பல்கலைக்கழகங்கள் கண்டுபிடிப்பு யு.ஜி.சி
நாடு முழுவதும் 24 போலி பல்கலைக்கழகங்கள் கண்டுபிடிப்பு - யு.ஜி.சி

நாடு முழுவதும் 24 போலி பல்கலைக்கழகங்கள் இயங்கி வந்தது கண்டுபிடிக்கப்பட்டு, நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாக பல்கலைக்கழக மானியக்குழு கூறியுள்ளது.

இதுகுறித்த, யு.ஜி.சி வெளியிட்டுள்ள பட்டியலில் கேரளாவின் செயின்ட் ஜான்ஸ் பல்கலைக் கழகம், புதுச்சேரி ஸ்ரீ போதி அகாடெமி உயர்கல்வி நிறுவனம், ஆந்திராவின் கிறிஸ்ட் நியூ டெஸ்ட்மென்ட் நிகர்நிலை பல்கலைக்கழகம், மகாராஷ்டிராவின் ராஜா அரபிக் பல்கலைக்கழகம், கர்நாடகாவின் படகன்வி சர்கார் வேர்ல்டு ஓபன் யுனிவர்சிட்டி உட்பட 24 கல்வி நிறுவனங்கள் இடம் பெற்றுள்ளன.

ஆனால், தமிழ்நாட்டில் எந்தவொரு பல்கலைக்கழகமும், இந்த பட்டியலில் இடம் பெற்வில்லை. அதேநேரம், போலி பல்கலைக்கழகங்களில், அதிக பட்சமாக டெல்லியில் 7, உத்தரபிரதேசத்தில் 8 பல்கலைக் கழகங்கள் இடம் பெற்றுள்ளதாக யு.ஜி.சி தெரிவித்துள்ளது.

No comments