Breaking News

ஆசிரியர் வழக்கில் உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

ஆசிரியர் வழக்கில் உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு
     சேலம் கருப்பூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் 37 ஆண்டுகளாக ஆசிரியராக பணியாற்றியவர் ராஜூ. 2019ல் விருப்ப ஓய்வு கோரி விண்ணப்பித்தார். எந்த நடவடிக்கையும் எடுக்காததை அடுத்து விருப்ப ஓய்வு வழங்க உத்தரவிடக்கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு நீதிபதி பார்த்திபன் முன் விசார ணைக்கு வந்தது. துறைரீதி விசாரணையில் ராஜுவின் செயலுக்கு கண்டனம் என்று நடவடிக்கை எடுக்கப்பட்டதால் விருப்ப ஓய்வு வழங்கவில்லை என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மனுதாரர் தரப்பில் வக்கீல் நீலகண்டன் ஆஜராகி , துறை ரீதியான நடவடிக்கைகளில் கண்டனம் தெரிவிப்பது என்பது மிக பெரிய தண்டனை இல்லை என்று வாதிட்டார். இதை பதிவு செய்த நீதிபதி , இந்த காரணத்தால் விருப்ப ஓய்வு வழங்கவில்லை என் பதை நீதிமன்றம் ஊக்குவிக் காது . எனவே , ஆசிரியர் ராஜூக்கு விருப்ப ஓய்வு வழங்குவது தொடர்பாக 2 வாரங்களுக்குள் நாமக்கல் மாவட்ட தலைமை கல்வி அதிகாரி உரிய உத்தரவை பிறப்பிக்க வேண்டும் என உத்தர விட்டு வழக்கை முடித்து வைத்தார்.

No comments