Breaking News

ஒரு கீரை, பல தீர்வுகள்

ஒரு கீரை, பல தீர்வுகள்
சிறு கீரையானது பரவலாக தோட்டங்களிலோ வீடுகளிலோ பயிர் செய்யப்படும் ஒருவகை கீரையாகும். இந்தக் கீரையின் பயன்கள் என்னென்ன என்பதை இந்த தொகுப்பில் பார்ப்போம்.

முளைக்கீரை, தண்டுக்கீரை போன்ற மற்ற கீரைகளை ஒப்பிடும்போது இது மிகச் சிறிய கீரை வகையாகும். 20 சென்டிமீட்டர் உயரம் வரை வளரக்கூடியது. நிறைய கிளைகள் உடையதாக இருக்கும். இந்த கீரை மெல்லிய தோற்றமுடையது. இந்த கீரையில் சுண்ணாம்பு சத்து, இரும்பு சத்து போன்றவை அதிக அளவில் உள்ளது. நீர் சத்து, புரதம், கொழுப்பு, தாது உப்பு, மாவு சத்து ஆகியவை இதில் உள்ளன. இந்த கீரையில் வைட்டமின் ஏ, பி, சி ஆகிய சத்துக்கள் நிறைந்துள்ளது. உடல் பருமன் கொண்டவர்கள், இதய நோயாளிகள், சர்க்கரை நோயாளிகள் ஆகியோர் இந்த கீரையை உண்டால் நன்மை ஏற்படும்.

மருத்துவ பயன்கள்

சிறு கீரையை தினமும் சமைத்து சாப்பிட இரும்பு சத்து அதிகரிக்கும். நீர்க்கடுப்பு, வீக்கம், பித்தநோய் சரியாகும். ச

சர்க்கரை நோய் உள்ளவர்கள் இந்த கீரையை எடுத்துக் கொண்டால் உடலில் இன்சுலின் சுரப்பு இயல்பாக இருக்கும்.

கீரையில் கால்சியம் சத்து அதிகமாக இருப்பதால் எலும்புகள் பலப்படும்.

நினைவாற்றலை அதிகரிக்க கூடிய சத்துக்களும் இந்த கீரையில் அடங்கியுள்ளது.

இந்த கீரையை தொடர்ந்து கொடுத்து வர எரிச்சல் தணியும், மூலநோய் கட்டுப்படும், வாயு மற்றும் வாத நோயை அகற்றும்.

மாலைக்கண் நோய் குணமாகும். சிறு கீரை உடலுக்கு அழகையும் பொலிவையும் தரக்கூடியது.

சிறு கீரையுடன் மிளகு, வெங்காயம், பூண்டு, மஞ்சள் சேர்த்து சூப் செய்து சாப்பிட்டால் கண்புகைச்சல் குறையும்.

சிறு கீரையுடன் முந்திரிப் பருப்பு மஞ்சள் சேர்த்து அரைத்து பருக்கள் மீது தடவ முகப்பரு குறையும்.

சிறுநீரகம் தொடர்பான பிரச்சனைகளுக்கு இந்த சிறு கீரை சிறந்த மருந்து.

சிறு கீரையுடன் சிறிது மஞ்சள் சேர்த்து நன்றாக அரைத்து தேய்த்துக் கொண்டால் சொறி, சிரங்கு, படை போன்ற நோய்கள் குணமாகும்.

No comments