Breaking News

1 முதல் 12 ஆம் வகுப்பு வரை இன்று முதல் பள்ளிகள் திறப்பு விருப்பமுள்ளவர்கள் வரலாம்

1 முதல் 12 ஆம் வகுப்பு வரை இன்று முதல் பள்ளிகள் திறப்பு விருப்பமுள்ளவர்கள் வரலாம்

கொரோனா பரவலுக்கு மத்தியில் புதுவையில் இன்று முதல் மீண்டும் பள்ளிகள் தொடங்கப்பட்டுள்ளது.

கொரோனா காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டன. கொரோனா குறைந்து வருவதன் அடிப்படையில் தளர்வுகளின் அடிப்படையில் கடந்த அக்டோபர் 8-ம் தேதி புதுச்சேரியில் 9 முதல் பிளஸ் 2 வரையிலான மாணவர்களுக்கு வகுப்புகள் தொடங்கப்பட்டன. இதையடுத்து கடந்த டிசம்பர் 17-ம் தேதி இளங்கலை, முதுகலை படிக்கும் இறுதியாண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் தொடங்கப்பட்டன.

இந்நிலையில் புதுச்சேரியில் 9 மாதங்களுக்குப் பின் பள்ளிகள் இன்று மீண்டும் திறக்கப்படுகிறது; கொரோனா தடுப்பு கட்டுப்பாடுகளுடன் மாணவர்கள் அனுமதிக்கப்படுவார்கள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை பள்ளிகள் செயல்படும் என்றும் 1, 3, 5, 7-ம் வகுப்புகள் திங்கள், புதன், வெள்ளிக்கிழமைகளிலும், 2, 4, 6, 8-ம் வகுப்புகள் செவ்வாய், வியாழன், சனிக்கிழமைகளிலும் சுழற்சி முறையில் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பள்ளியில் மாணவர்களுக்கு வருகை பதிவேடு கிடையாது என்பதால் விருப்பமுள்ள மாணவர்கள் மட்டும் பள்ளிகளுக்கு செல்லலாம்.