வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான பயிற்சி கையேடு மற்றும் அவர்களின் கடமைகள்
வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான பயிற்சி கையேடு மற்றும் அவர்களின் கடமைகள்
வாக்குச் சாவடி தலைமை அலுவலர் மற்றும் 3 வாக்குச் சாவடி அலுவலர்கள் உள்ள
இடங்களில் அவர்களின் கடமைகள்.
வாக்குப் பதிவு அலுவலர் 1 :
இடம் குறியிடப்பட்ட வாக்காளர் பட்டியல் இருக்கும் . வாக்காளர்களை அடையாளம்
காண்பதற்கும் அவரே பொறுப்பாவார்.
வாக்குப் பதிவு அலுவலர் 2 :
வாக்காளரின் இடது கை ஆட்காட்டி விரலில் அழியாத மை இட்டு வாக்காளர் பதிவேட்டில்
வாக்காளரின் பாகம் எண் , வரிசை எண் , ஆகியவற்றை எழுதி , வாக்காளர் காட்டும்
புகைப்பட அடையாள அட்டை போன்ற அடையாள ஆவணத்தின் பெயரை பதிவேட்டின் 4 வது காலத்தில்
, அதாவது குறிப்புகள் காலத்தில் அந்த ஆவணத்தின் எண்களை எழுத வேண்டும்.
அதன்பிறகு , வாக்காளரின் கையொப்பம் / பெருவிரல் ரேகைப் பதிவினை பெற்றுக் கொண்டு ,
வாக்காளர் துண்டுச் சீட்டினைவழங்க வேண்டும்.
வாக்காளர் பதிவேட்டினை நிரப்பி , வாக்காளர் துண்டுச் சீட்டினை அளிக்க நிறைய நேரம்
எடுத்துக் கொள்ளப்படும் பட்சத்தில் வாக்காளர் வரிசை மெதுவாக நகரும் வாய்ப்பு
உண்டு.
அதனால் அனைத்து வாக்குப் பதிவுக் குழுவினரிடமும் அச்சிடப்பட்ட வெற்று வாக்காளர்
துண்டுச் சீட்டுகள் இருப்பது அவசியமாகும் .
ஒரு வாக்குச் சாவடிக்கு ஒதுக்கப்பட்ட வாக்காளர் எண்ணிக்கை 1200 -க்கு மேல்
இருக்குமானால் , கூடுதல் வாக்குப் பதிவு அலுவலர் 2 நியமிக்கப்பட வேண்டும். ( இவர்
வாக்குப் பதிவு அலுவலர் 2B என்று அழைக்கப்படுவார் ) ( 25/10/2007 நாளிட்ட
இந்தியத் தேர்தல் ஆணையக் கடிதம் ) 731
வாக்குப் பதிவு அலுவலர் 3
கட்டுப்பாட்டு கருவிக்கு பொறுப்பாவார். அவர் வாக்காளர்களிடம் இருந்து வாக்காளர்
துண்டுச் சீட்டினை பெற்றுக் கொள்ள வேண்டும். வாக்காளர்களின் இடது கை ஆள்காட்டி
விரலில் இடப்பட்டுள்ள அழியா மையை சரிபார்க்க வேண்டும் .
முக்கியமாக கட்டுப்பாட்டு கருவியிலுள்ள வாக்குப் பதிவு பட்டனை அழுத்தி வாக்குப்
பதிவு அடைப்புப் பகுதியில் உள்ள வாக்குப் பதிவுக் கருவியை வாக்களிக்க தயார்
நிலையில் வைத்து , வாக்குப் பதிவு அடைப்புப் பகுதிக்குள் செல்ல வாக்காளர்களுக்கு
வழிகாட்ட வேண்டும்.