Breaking News

28ம் தேதி வரை ஊரடங்கு அறிவிக்கப்பட்ட நிலையில் பள்ளிக்கல்வித்துறை முக்கிய அறிவிப்பு

28ம் தேதி வரை ஊரடங்கு அறிவிக்கப்பட்ட நிலையில் பள்ளிக்கல்வித்துறை முக்கிய அறிவிப்பு
தமிழகத்தில் வரும் 28ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழகங்களில் மாணவர் சேர்க்கை மற்றும் நிர்வாகப் பணிகளை மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

கடந்த ஓராண்டுக்கு மேலாக கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டுள்ள நிலையில் ஆன்லைன் வகுப்புகள் மட்டும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவர்களுக்கு இலவச பாடநூல்கள் வழங்கும் திட்டம், கல்வி தொலைக்காட்சியில் வீடியோக்கள் மூலம் கல்வி கற்கும் முறை என அனைத்தும் தொடங்கப்பட்டு நடைமுறைக்கு வந்துள்ளது.

இந்நிலையில், கல்வி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பாடங்கள் குறித்த விவரங்களை மாணவர்களுக்கு தெரியப்படுத்த பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

அதன்படி, 'பள்ளிகளை திறக்க இப்போதைக்கு வாய்ப்பில்லை என்பதால் கல்வி தொலைக்காட்சி மூலமாக பாடங்களை கற்பிக்க வேண்டும். கல்வி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பாடங்களின் அட்டவணையை மாணவர்களுக்கு தெரியப்படுத்த வேண்டும்.

கல்வி டிவி மூலம் கற்றல், கற்பித்தல் பணிகளை தலைமையாசிரியர்கள் மேற்கொள்ள வேண்டும். ஒளிபரப்பாகும் பாடங்கள் குறித்த விழிப்புணர்வு புரிதலை மாணவர்களின் பெற்றோருக்கு ஏற்படுத்த வேண்டும்' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது