ஜூலை 31ந் தேதி பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியான பிறகு கல்லூரி மாணவர் சேர்க்கை - அமைச்சர் பொன்முடி
ஜூலை 31ந் தேதி பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியான பிறகு கல்லூரி மாணவர்
சேர்க்கை தொடங்கும் - அமைச்சர் பொன்முடி
பிளஸ் 2 மதிப்பெண்கள் ஜூலை 31ஆம் தேதிக்குள் வெளியானவுடன், ஆகஸ்ட் 1ஆம்
தேதிக்குப் பிறகு, கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை தொடங்கும் என உயர்கல்வித்துறை
அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.
அவரும், துறைசார்ந்த அதிகாரிகளும், தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர்
மு.க.ஸ்டாலினை சந்தித்து உயர்கல்வி மாணவர் சேர்க்கை தொடர்பாக ஆலோசனை நடத்தினர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் பொன்முடி, சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வு
முடிவுகள், ஜூலை 31ஆம் தேதிக்குள் வெளியிடப்பட இருப்பதை சுட்டிக்காட்டினார்.
தமிழ்நாட்டுப் பாடத்திட்டத்திலும் மதிப்பெண் கணக்கிடும் பணிகள் நடைபெற்று வருவதாக
அவர் கூறினார். பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியாவதற்கு முன்னதாக கல்லூரிகளில்
மாணவர் சேர்க்கை நடத்தினால் நடவடிக்கை எடுக்கப்படும் என பொன்முடி எச்சரித்தார்