இந்தியாவில் புதிதாக 42766 பேருக்கு கொரோனா உறுதி - 1206 பேர் பலி
இந்தியாவில் புதிதாக 42766 பேருக்கு கொரோனா உறுதி - 1206 பேர் பலி
இந்தியாவின் கொரோனா ஒருநாள் பாதிப்பு எண்ணிக்கை நேற்றைவிட சற்று குறைந்துள்ளது.
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 42,766 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மொத்த பாதிப்பு 3,07,52,645 ஆக அதிகரித்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் 1,206 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர். இதன்மூலம்
இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4,07,145 ஆக உயர்ந்துள்ளது.
ஒரே நாளில் 45,254 பேர் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ்
செய்யப்பட்டுள்ளனர். நாடு முழுவதும் தற்போது கொரோனா பாதிப்புடன் 4,55,033 பேர்
சிகிச்சை பெற்று வருகின்றனர்.