பள்ளி மாணவர்களுக்கான அறிவியல் திறன் தேர்வு மத்திய அரசு அறிவிப்பு
அறிவியல் திறன் தேர்வு மத்திய அரசு அறிவிப்பு
Apply Link - Click Here
பள்ளி மாணவர்களின், அறிவியல் ஆர்வம் மற்றும் அவர்களின் எதிர்கால அறிவியல்
படிப்புகளை ஊக்குவிக்கும் வகையில், மத்திய அரசின், தேசிய கல்வியியல் ஆராய்ச்சி
கவுன்சிலான, என்.சி.இ.ஆர்.டி., சார்பில், திறன் தேர்வு நடத்தப்படுகிறது.
'வித்யார்த்தி விஞ்ஞான் மந்தன்' என்ற அறிவியல் தேர்வு, இந்த ஆண்டு நவ., 30 அல்லது
டிச., 5ல் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆறு முதல் எட்டாம் வகுப்பு
வரையிலான மாணவர்கள், இந்த தேர்வை எழுதலாம்.
அவர்களில் மாவட்ட மற்றும் மாநில அளவில் தேர்வாகும் மாணவர்களுக்கு, உதவி தொகை
மற்றும் பரிசு தொகை வழங்கப்பட உள்ளது.மேலும், அறிவியல் ரீதியான சிறப்பு பயிற்சி,
மத்திய அரசின் அறிவியல் ஆராய்ச்சி மையங்களை பார்வையிடுவதற்கான ஏற்பாடுகள்
செய்யப்படும்.
இந்த தேர்வுக்கான விண்ணப்ப பதிவு, vvm.org.in/ என்ற இணையதளத்தில் துவங்கியுள்ளது.
அக்., 31 வரை விண்ணப்பிக்கலாம். &'ஆன்லைன்&' வழியில் இந்த தேர்வு
நடத்தப்பட உள்ளது.