Breaking News

சுழற்சி முறையில் பள்ளிகள் திறப்பு - அரசு அதிரடி அறிவிப்பு

சுழற்சி முறையில் பள்ளிகள் திறப்பு - அரசு அதிரடி அறிவிப்பு
"தமிழகத்தில், குறிப்பிட்ட வகுப்புகளுக்கு பள்ளிகளை திறக்க தயார் நிலையில் உள்ளோம்; முதற்கட்டமாக. ஒரு வகுப்பிற்கு 20 மாணவர்களை சுழற்சி முறையில் வரவழைத்து பாடம் நடத்த ஏற்பாடு செய்துவருகிறோம்" என, அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.
தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, பள்ளிகள் திறப்பு குறித்து பேசிய அவர், "கொரோனா தொற்று குறைந்துள்ளதை அடுத்து, பல்வேறு மாநிலங்களில் வெவ்வேறு கட்டங்களாக பள்ளிகள் திறக்கப்பட்டு வருகின்றன.

அந்த வகையில், தமிழகத்தில் 9ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு செப்டம்பர் 1ம் தேதி முதல் பள்ளிகளைத் திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி பள்ளிகளுக்கு சுழற்சி முறையில் மாணவர்களை வரவழைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் பாதுகாப்பு நடவடிக்கையாக மாணவர்களை சுழற்சிமுறையில் பள்ளிக்கு வரவழைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். முதல் நாளில் 20 மாணவர்கள், மறுநாள் மீதமுள்ள 20 மாணவர்கள் என வகுப்பிற்கு வர வைக்க திட்டமிட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

No comments