20 மாதங்களுக்குப் பின் கர்நாடகாவில் தொடக்கப் பள்ளிகள் திறப்பு - கட்டுப்பாடுகள் என்னென்ன
20 மாதங்களுக்கு பிறகு கர்நாடகத்தில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை தொடக்க பள்ளிகள் இன்று திறக்கப்படுகிறது.
கொரோனா ஊரடங்கு காரணமாக கல்விநிறுவனங்கள் மூடப்பட்டு பின்னர், உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் திறக்கப்பட்டன. இந்நிலையில், இன்று முதல் தொடக்கப் பள்ளிகளும் திறக்கப்படுவதால் தூய்மை பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
பள்ளிகளுக்கு வரும் குழந்தைகள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும், சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது. 50 சதவீத குழந்தைகளை மட்டுமே அனுமதிக்க வேண்டும் என்றும், முதல் ஒரு வாரம் பள்ளிகளை அரை நாள் மட்டுமே நடத்த வேண்டும் என்று அரசு கூறியுள்ளது.