தமிழக அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கு முக்கிய உத்தரவு – பள்ளிகல்வி இணை இயக்குனர் சுற்றறிக்கை!
தமிழக அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கு முக்கிய உத்தரவு – பள்ளிகல்வி இணை இயக்குனர் சுற்றறிக்கை!
தமிழக அரசு பள்ளி ஆசிரியர்கள் தங்களின் சொத்து மற்றும் கடன் விவரம் குறித்த அறிக்கையை சமர்ப்பிக்குமாறு பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இது குறித்து பள்ளிக்கல்வி இணை இயக்குனர் முதன்மை கல்வி அலுவலர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.
அரசு ஆசிரியர்கள்:
தமிழகத்தின் வளர்ச்சிக்கு அரசு ஊழியர்களின் பங்கு இன்றியமையாததாக உள்ளது. இதனை கருத்தில் கொண்டு அரசு, அரசு ஊழியர்களுக்கு தனி சலுகைகளை வழங்கி வருகிறது. அதன் படி முதல்வர் முக ஸ்டாலின் சட்டமன்ற தேர்தலின் போது அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்படும் என்று வாக்குறுதி அளித்தார். இதனையடுத்து பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைபடுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் கடந்த வருடம் முதல் பரவி வரும் கொரோனா பெருந்தொற்று காலத்திலும் அரசு ஊழியர்களுக்கு ஊதியம் வழங்கப்பட்டது.
அதனை தொடர்ந்து அகவிலைப்படியை உயர்த்த வேண்டும் என்று அரசு ஊழியர்களின் கோரிக்கை விடுத்தனர். இதனை ஆராய்ந்த அரசு 2022ம் ஆண்டு முதல் அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு அமல்படுத்தப்படும் என்று முதல்வர் முக ஸ்டாலின் அறிவித்துள்ளார். இந்த நிலையில் அரசு ஊழியர்கள் சொத்து மற்றும் கடன் குறித்த விவர அறிக்கையை சமர்ப்பிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதையடுத்து அரசு பள்ளி ஆசிரியர்களும் தங்களின் சொத்து மற்றும் கடன் விவர அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.