Breaking News

பெட்ரோல், டீசல் விலை அதிரடியாக குறைப்பு - மத்திய அரசு அறிவிப்பு.

பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை மத்திய அரசு குறைத்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, பெட்ரோல் விலையில் லிட்டருக்கு 5 ரூபாயும், டீசல் விலையில் 10 ரூபாயும் குறைக்கப்பட்டுள்ளது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கலால் வரி குறைக்கப்பட்டுள்ளது. இந்த விலை குறைப்பு நாளை முதல் அமலுக்கு வரும் என்றும் மத்திய அரசு அறிவித்துள்ளது