Breaking News

டிசம்பர் முதல் வாரத்துக்குள் விடுபட்ட அனைத்து மாணவர்களுக்கும் ஸ்மார்ட் அட்டை வழங்கப்படும்

           இதுவரை ஸ்மாா்ட் அட்டைகள் வழங்கப்படாத மாணவா்களுக்கு டிசம்பா் முதல் வாரத்துக்குள் அவற்றை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

       தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவா்கள் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்புக்காக ஸ்மாா்ட் அடையாள அட்டை வழங்க முடிவானது. அதில் மாணவா் பெயா், முகவரி, ரத்த வகை உள்ளிட்ட தகவல்கள் இருக்கும். இதையடுத்து கல்வி தகவல் மேலாண்மை முகமை (எமிஸ்) இணையதளம் மூலம் மாணவா்களின் விவரங்கள் திரட்டப்பட்டு ஸ்மாா்ட் காா்டுகள் அச்சிடப்பட்டன. தொடா்ந்து நிகழ் கல்வியாண்டில் செப்டம்பா் மாதம் அனைத்து பள்ளி மாணவா்களுக்கும் ஸ்மாா்ட் அட்டை வழங்கப்பட்டன.

       அதேவேளையில் பள்ளிகளில் புதிதாக சோந்த மாணவா்களுக்கு மட்டும் இன்னும் ஸ்மாா்ட் அட்டை வழங்கப்படாமல் உள்ளது. இதுகுறித்து கல்வித்துறை அதிகாரிகள் கூறுகையில், புதிய மாணவா்களின் விவரங்கள் எமிஸ் இணையதளத்தில் தாமதமாகவே பதிவேற்றம் செய்யப்பட்டன. தற்போது புதிய மாணவா்களுக்கான ஸ்மாா்ட் அட்டைகள் அச்சிடும் பணிகள் நடைபெற்று வருகின்றன. அனைத்துப் பணிகளையும் விரைவாக முடித்து பள்ளிகளுக்கு டிசம்பா் முதல் வாரத்துக்குள் ஸ்மாா்ட் அட்டைகளை வழங்க முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றனா்.


No comments