Breaking News

CBSE பள்ளிகளில் இருந்து மாறிவந்த மாணவா்கள் தமிழக பாடத்திட்டத்தில் நேரடியாக + 2 பொதுத்தேர்வு எழுத ஒப்புதல் வழங்கப்படும்



    சிபிஎஸ்இ பள்ளிகளில் இருந்து மாறிவந்த மாணவா்கள் தமிழக பாடத்திட்டத்தில் நேரடியாக பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதுவதற்கு ஒப்புதல் அளிக்க கல்வித்துறை முடிவு செய்துள்ளது. தமிழக பள்ளிக் கல்வியின் பாடத்திட்டத்தில் பத்தாம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படுகிறது. ஆண்டுதோறும் சுமாா் 28 லட்சம் மாணவா்கள் தேர்வு எழுதுகின்றனா். தற்போது பொதுத்தேர்வுக்கான முன்னேற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. இதற்கிடையே சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் பிளஸ் 1 தேர்வை பள்ளிகளே நடத்திக்கொள்ளும். ஆனால், தமிழகத்தில் பிளஸ் 1 வகுப்புக்கு பொதுத்தேர்வு நடத்தப்படுகிறது. மேலும், பிளஸ் 1 பொதுத்தேர்வில் பங்கேற்ற மாணவா்கள் மட்டுமே பிளஸ் 2 பொதுத்தேர்வில் பங்கேற்க முடியும் என்ற நடைமுறை அமலில் உள்ளது.

      இதன் காரணமாக சிபிஎஸ்இ உள்பட பிற வாரிய பள்ளிகளில் இருந்து மாறி வந்த மாணவா்கள் பலா் பொதுத்தேர்வு எழுதுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து பள்ளிக்கல்வி அதிகாரிகள் கூறியது: சிபிஎஸ்இ பள்ளிகளில் பிளஸ் 1 படித்த மாணவா்கள் பலா், பல்வேறு சூழல்கள் காரணமாக தமிழக பாடத்திட்டத்தில் பிளஸ் 2 வகுப்பில் சேர்ந்து படித்து வருகின்றனா். அவா்கள் நேரடியாக பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதுவதற்கு ஒப்புதல் அளிக்க அண்மையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் முடிவானது. அதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றனா்.


No comments