Breaking News

கரோனா: 3 மாதங்களுக்கு இலவச கேஸ் என மத்திய அரசு அறிவிப்பு

கரோனா: 3 மாதங்களுக்கு இலவச கேஸ் என மத்திய அரசு அறிவிப்பு

21 நாட்கள் ஊரடங்கில் பாதிக்கப்படும் ஏழை தொழிலாளர்களுக்காக பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்.

கரோனா தடுப்பு நடவடிக்கைகளால் பாதிக்கப்பட்டுள்ள ஏழை,எளிய தொழிலாளர்களுக்கு 1.70 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

இந்தியா முழுவதும் கரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்த 21 நாட்கள் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அதனால் பாதிக்கப்படும் ஏழை எளிய தொழிலாளர்களுக்கு 1.70 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் பேசிய அவர், “விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் 6,000 ரூபாய் வழங்கப்படும் நிலையில், முதல் தவணை தற்போது வழங்கப்படும். 8.69 கோடி விவசாயிகள் இதனால் பயனடைவர்.

80 கோடி ஏழைகளுக்கு மூன்று மாதத்திற்கு கூடுதலாக 5 கிலோ அரிசி அல்லது கோதுமை வழங்கப்படும். ஒரு கிலோ பருப்பும் இலவசமாக வழங்கப்படும்.


மூத்த குடிகள் 3 கோடி பேருக்கு இரண்டு தவணையாக 1,000 ரூபாய் என மூன்று மாதங்கள் வழங்கப்படும். 100 நாள் வேலைத்திட்டத்தில், கூடுதலாக 2,000 ரூபாய் வழங்கப்படும்.

100 பேருக்கும் குறைவான ஊழியர்களை வைத்திருக்கும் நிறுவனங்களில் 3 மாதங்களுக்கு ஊழியர்களோ, நிறுவனங்களோ பி.எஃப் தொகை கட்டத்தேவையில்லை. மத்திய அரசே கட்டும்.


ஜன் தன் கணக்கு வைத்திருக்கும் பெண்களுக்கு 3 மாதங்களுக்கு தலா 500 ரூபாய் வழங்கப்படும். 

உஜ்வாலா யோஜனா திட்டத்தின் கீழ் 3 மாதங்களுக்கு இலவச கேஸ் சிலிண்டர் வழங்கப்படும். மத்திய அரசின் இந்த அறிவிப்பால் 8 கோடி பெண்கள் பயனடைவர்.” என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.


No comments