Breaking News

வரும் 13ஆம் தேதி முதல் அரசுப் பள்ளிகளில் ஆன்லைன் கல்வி முறை தொடக்கம்

வரும் 13ஆம் தேதி முதல் அரசுப் பள்ளிகளில் ஆன்லைன் கல்வி முறை தொடக்கம்
கொரோனா வைரஸ் பாதிப்பின் காரணமாக நாடு முழுவதிலும் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டிருக்கின்றன. கிட்டத்தட்ட 2 மாதங்களுக்கு மேலாக பள்ளிகள் மூடப்பட்டிருப்பதால் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு ஆன்லைன் வகுப்புகள் நடத்துமாறு அரசு அறிவுறுத்தியது.

அதன் படி பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைனில் பாடம் நடத்தப்பட்டு வருகிறது. கொரோனா பரவல் வரும் செப்டம்பர் மாதம் வரை நீடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளதால், பள்ளிகளும் அதற்கு பிறகு தான் திறக்கப்படும் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் அரசுப் பள்ளிகளில் வரும் 13ஆம் தேதி முதல் ஆன்லைன் கல்வி முறை தொடங்கப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். தனியார் பள்ளிகள் போன்று அரசுப் பள்ளி மாணவர்களுக்கும் ஆன்லைனில் பாடம் கற்பிக்கப்படும் என்று கூறியுள்ள அவர் அதற்கான பணிகள் விரைவில் துவங்கும் என்று கூறியுள்ளார்.

No comments