Breaking News

பொடுகு தொல்லை இனி இல்லை இத ட்ரை பண்ணி பாருங்க!

பொடுகு தொல்லை இனி இல்லை இத ட்ரை பண்ணி பாருங்க!
கண்ணுக்கு மைய அழகு, காலுக்கு கொலுசு அழகு, பெண்ணுக்கு கூந்தல் அழகு என்று பலர் சொல்வதை கேட்டிரூப்போம். ஆனால், இன்றைய காலக்கட்டத்தில் பெண்களுக்கு கூந்தலை பராமரிப்பதே பெரிய சுமையாக இருக்கிறது. எவ்வளவும் தான் முடியை பத்திரமாக பாதுகாத்தாலும் பொடுகு வந்தால் எல்லாம் பொசுக்கென்று போய் விடும்.
இதனால் தான் பெண்கள் பலர் நீளமான கூந்தல் வளர்ப்பதை முற்றிலுமாக தவிர்க்கின்றனர். பெண்கள் மட்டுமில்லாமல் ஆண்களுக்கும் பொடுகு தொல்லை என்பது சகித்துக் கொள்ள முடியாத ஒன்று. தலையில் அதிகப்படியான பொடுகு ஏற்படும் போது, அவை நமது ட்ரெஸ்ஸில் விழுவதை கண்கூட பார்க்கலாம். அதே போல், அதிகப்படியான பொடுகும் முகத்தில் ஏற்படும் பருவிற்கு காரணம் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். இவ்வளவு பிரச்சனைக்கு காரணமான, பொடுகை இயற்கை வழியில் தொலைத்து கட்டும் வழிமுறைகளை இந்த கட்டுரையில் காண்போம்.

வெந்தயம் : 

வெந்தயம் போல் ஒரு குளிர்ச்சியான பொருள் வேரு ஏதுவுமில்லை.வெறும் தேங்காய் எண்ணெய்யில் வெந்தயத்தை ஊற வைத்து, தலை முடியில் தேய்த்தால் ஒரே வாரத்தில் பொடுக்கு குட் பை சொல்லாம். அதே போல், ஊற வைத்த வெந்தயத்துடன், தேங்காய் சேர்த்து பேஸ்ட் போல் அரைத்து அதை தலையில் தேய்த்து குளித்தால் பொடுகு தொல்லை அடியோடு நீங்கும்.

இலுப்பை புண்ணாக்கு:

பெயரை கேட்டு அதிர்ச்சி அடைய வேண்டும். இலுப்பை புண்ணாக்கை நாட்டு மருந்துகளில் எளிதாக கிடைக்கும். அதை வாங்கி வந்து, இடித்து நன்கு பொடியாக்கி நீரில் கலக்க வேண்டும். இந்த பசையை தலையில் தடவி சிறிது நேரம் கழித்து குளித்தால் பொடுகு தொல்லை சரியாகும்.

கற்றாழை: 

கற்றாழை சாற்றை தலையில் வடு பகுதியில் நன்கு தேய்க்க வேண்டும். பின்பு, கைகள் தலை முடியை மெதுவாக மசாஜ் செய்ய வேண்டும். பின்பு, வெது வெதுப்பான நீரில் தலையை அலசல் வேண்டும் வாரம் ஒரு முறை இப்படி செய்தால், பொடுகு தொல்லை மற்றும் அதனால் ஏற்படும் அரிப்பு நீங்கும்.

பாசிப்பருப்பு: 

பாசிப்பருப்பு உடலில் இருக்கும் உஷ்ணத்தை குறைக்கும். கணினியில் அமர்ந்து வேலை செய்யும் பலருக்கும் உடல் உஷ்ணம் அதிகரிக்கும். உடல் உஷ்ணத்தாலும் பலருக்கு பொடு தொல்லை ஏற்படும். அப்படிப்பட்டவர்கள் பாசிப்பருப்பை அரைத்து அதனுடன் தயிர் கலந்து தலைமுடியில் தடவி 1 மணி ஊற வைக்க வேண்டும். பின்பு வெதுவெதுப்பான நீரில் தலைமுடியை அலச வேண்டும்.

No comments