Breaking News

ஆன்லைன் வகுப்பு முடிகளை பிய்த்து சாப்பிட்ட மாணவி - ஆட்சியரிடம் அறிக்கை கேட்கும் ஆணையம்

ஆன்லைன் வகுப்பு: முடிகளை பிய்த்து சாப்பிட்ட மாணவி - ஆட்சியரிடம் அறிக்கை கேட்கும் ஆணையம்
கொரோனா தொற்றால் கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக பள்ளிகள் மூடப்பட்டுள்ளதால் ஆன்லைன் வகுப்புகள் மற்றும் கல்வி தொலைக்காட்சி மூலமாக பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பாடம் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் விழுப்புரம் நகரில் வசிக்கும் 15 வயதுடைய மாணவி ஒருவர், கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக ஆன்லைன் வகுப்பு மூலம் கல்வி கற்று வருகிறார். அவரது பெற்றோர் இருவரும் பணிக்கு சென்றுவிடுவதால் அம்மாணவி, தனது பாட்டியுடன் வீட்டில் இருந்து வந்த சூழலில் அம்மாணவிக்கு திடீரென வயிற்றுவலி, வாந்தி ஏற்பட்டுள்ளது. உடனே அந்த மாணவியை அவரது பெற்றோர், விழுப்புரத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச்சென்று பரிசோதனை செய்தபோது, அவரது வயிற்றில் கட்டி இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இதனை தொடர்ந்து மருத்துவர் மகேந்திரன் தலைமையிலான மருத்துவ குழுவினர் கடந்த வாரம், அந்த மாணவிக்கு அறுவை சிகிச்சை செய்து அவரது வயிற்றிலிருந்து சுமார் ஒரு கிலோ எடையுள்ள முடிகளால் ஆன கட்டியை அகற்றினர். மேலும் ஆன்லைன் வகுப்புகளால் பல்வேறு குழந்தைகளுக்கு மன உளைச்சல் ஏற்படுவதால் தனிமையில் குழந்தைகள் இதுபோன்ற பாதிப்புகளுக்கு ஆளாவதாக மருத்துவக்குழு தெரிவித்துள்ளது.

இந்நோயை மருத்துவத் துறை Rapunzel Syndrome எனப் பெயரிட்டுள்ளது தெரியவந்ததுள்ளது. இதையடுத்துச் சிறுமி, பெற்றோர்கள் மூலம் மனநல மருத்துவரிடம் ஆலோசனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு தற்போது சிகிச்சை பெற்று வருகிறார்.

No comments