Breaking News

கொரோனா மூன்றாம் அலை அக்டோபர்-நவம்பரில் உச்சத்திற்கு செல்ல வாய்ப்பு - மத்திய அரசு நியமித்துள்ள விஞ்ஞானிகள் குழு எச்சரிக்கை

கொரோனா மூன்றாம் அலை அக்டோபர்-நவம்பரில் உச்சத்திற்கு செல்ல வாய்ப்பு..! மத்திய அரசு நியமித்துள்ள விஞ்ஞானிகள் குழு எச்சரிக்கை

class="col-12 p-0" style="-webkit-box-flex: 0; background-color: #f8fbfd; box-sizing: border-box; color: #212529; flex: 0 0 100%; font-family: Pavanam, sans-serif; font-size: 16px; max-width: 100%; min-height: 1px; padding: 0px !important; position: relative; user-select: initial !important; width: 640.5px;" >

புதிய உருமாறிய கொரோனா தொற்றால் மூன்றாவது அலை உருவானால் அக்டோபர் நவம்பரில் உச்சநிலையை அடையும் என்றும், அது இரண்டாம் அலையின் உச்சநிலையைவிடப் பாதியாக இருக்கும் என்றும் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்திய அரசின் வல்லுநர் குழுவில் இடம்பெற்றுள்ள மணீந்திர அகர்வால் ஒரு கணிப்பை வெளியிட்டுள்ளார். அதில் கொரோனா தடுப்பு விதிகளை முறையாகப் பின்பற்றாவிட்டால் மூன்றாம் அலை உருவாக வாய்ப்புள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

இப்போதுள்ளதைவிட 25 விழுக்காடு அதிகப் பரவல் வேகம் கொண்ட புதிய தொற்று ஆகஸ்டில் பரவத் தொடங்கினால் அக்டோபர் நவம்பரில் உச்சநிலையை எட்டும் என்றும், இரண்டாம் அலையின் உச்சத்தைவிடப் பாதியாக ஒருநாளில் ஒன்றரை லட்சம் முதல் 2 லட்சம் வரை பாதிப்பு இருக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

மூன்றாவது அலையின்போது மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட வேண்டியோர் எண்ணிக்கை குறைவாக இருக்கும் என்றும் மற்றொரு வல்லுநரான வித்யாசாகர் தெரிவித்துள்ளார்.

No comments