கல்வி ஆண்டு தொடங்கும் 6 மாதத்திற்கு முன்பே மடிக்கணினி - பள்ளிகல்வித்துறை அமைச்சர்
2017-18 ம் ஆண்டு பயின்ற பண்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் திட்டம் தொடர்பாக மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்கள் வி.பி.நாகைமாலி மற்றும் மா. சின்னதுரை கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தனர்.இதற்கு பள்ளிகல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி விளக்கம் அளித்தார். அப்போது அவர் பேசியதாவது, 2011-12 முதல் 2019-20ம் ஆண்டு முடிய இத்திட்டத்தின் கீழ் 4571675 மாணவர்கல் மடிக்கணினி பெற்றுள்ளனர். இதற்காக 6349.63 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது.
2017 -18ம் கல்வியாண்டில் பயின்ற மாணவர்களில் சென்னை, கோயமுத்தூர், ஈரோடு,காஞ்சிபுரம்,மதுரை, பெரம்பலூர்,சேலம், தேனி ஆகிய எட்டு மாவட்டங்களில் பயின்ற மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினிகள் முழுமையாக வழங்கப்பட்டுள்ளது.மற்ற மாவட்டங்களில் பயின்ற மாணவர்களில் தற்போது உயர் கல்வி பயிலும் மாணவர்களுக்கு பயிலும் கல்வி நிறுவனங்களால் வழங்கப்படும்.
2020-21 ஆண்டு 11 வகுப்பு பயின்ற 497028 மாணவர்களுக்கு கொடுக்கவேண்டிய மடிக்கணினிகள் இன்னும்கொடுக்கப்படவில்லை. தற்போது 2021-22ம் கல்வியாண்டியில் 11 ம் வகுப்பு தோராயமாக பயின்று வரும் 500000 மாணவர்களுக்கு மடிக்கணிகள் வழங்கப்படவேண்டியுள்ளது. 2017-18ம் ஆண்டில் வழங்கப்படவேண்டிய நிலுவை 175789 என மொத்தம் 1172817 மடிக்கணிகள் வழங்கப்பட வேண்டியுள்ளது. தற்போது அனைத்து பணிகளும் முடிப்பதற்கு நிர்வாக அனுமதி வழங்குவதற்கு பூர்வாங்க நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளது. படிப்படியாக அனைத்து மாணவர்களுக்கும் அரசாணையில் தெரிவிக்கப்பட்டபடி மடிக்கணிகள் கொள்முதல் செய்யப்பட்டு வழங்கப்படும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பதில் அளித்தார்.இனி வரும் காலங்களில் கல்வியாண்டு தொடக்கத்திலே மடிக்கணினி வழங்கவேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிட் கட்சி உறுப்பினர் நாகை மாளி வலியுறுத்தினார். இதற்கு பதில் அளித்த அமைச்சர் அன்பில் மகேஷ், 6 மாதங்களுக்கு முன்பே திட்டங்கள் வகுத்து உரிய நேரத்தில் மடிக்கணினி வழங்கப்படும் என்றார்.