Breaking News

தமிழக பள்ளிகளில் அதிகரிக்கும் கொரோனா தொற்று – தலைமைச் செயலர் இன்று ஆலோசனை

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு வருவதையடுத்து அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமைச் செயலர் இறையன்பு இன்று (செப்டம்பர் 8) ஆலோசனை மேற்கொள்ள உள்ளார்.

கொரோனா தொற்று
தமிழகம் முழுவதும் கொரோனா 2 ஆம் அலை பரவல் குறைந்துள்ளதையடுத்து கடந்த செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் பள்ளிகள், கல்லூரிகள் அனைத்தும் மீண்டுமாக திறக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் பள்ளிகளில் 9 முதல் 12 ஆம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கு மட்டும் நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக பள்ளி மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள் என பலருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டு வருகிறது.

அந்த வகையில் இதுவரை நாமக்கல், அரியலூர், திருச்சி, தஞ்சாவூர், கோவை மற்றும் ராஜபாளையம் பகுதியை சேர்ந்த அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்களுக்கும், ஆசிரியர்களும் நோய் தொற்று பதிவு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து கொரோனவால் பாதிக்கப்பட்டுள்ள பள்ளிகளுக்கு மட்டும் ஒரு சில நாட்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் மாணவர்கள் மத்தியில் அதிகரித்து வரும் கொரோனா தொற்றை தடுப்பது குறித்த முக்கிய ஆலோசனையில் தலைமை செயலாளர் இறையன்பு ஈடுபட உள்ளார். இன்று (செப்டம்பர் 7) பிற்பகல் 3 மணியளவில் நடைபெறும் இந்த கூட்டத்தில் அனைத்து மாவட்ட ஆட்சியர்களும் கலந்து கொள்ள உள்ளனர். அந்த வகையில் பள்ளிகள் தோறும் புதிய கட்டுப்பாடுகளை விதிப்பது குறித்தும், பள்ளிகளை மூடுவது தொடர்பான ஆலோசனைகளும் மேற்கொள்ளப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

No comments