Breaking News

10 மற்றும் 11ம் வகுப்பு வருகைப் பதிவு பணிகளை பாதுகாப்பாக மேற்கொள்ளுமாறு அனைத்து பள்ளிகளுக்கும் அரசு தேர்வுகள் இயக்ககம் உத்தரவிட்டுள்ளது.

10 மற்றும் 11ம் வகுப்பு வருகைப் பதிவு பணிகளை பாதுகாப்பாக மேற்கொள்ளுமாறு அனைத்து பள்ளிகளுக்கும் அரசு தேர்வுகள் இயக்ககம் உத்தரவிட்டுள்ளது.
கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதையடுத்து 10 மற்றும் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நடைபெறவிருந்த பொதுத் தேர்வுகள் அனைத்தும் தள்ளி வைக்கப்பட்டது. பின் கொரோனா தீவிரமடைந்து வந்ததன் காரணமாக அனைத்து மாணவர்களுக்கும் காலாண்டு மற்றும் அரையாண்டுத் தேர்வின் அடிப்படையில் மதிப்பெண்கள் வழங்கப்படும் என அறிவித்து தேர்வை தமிழக அரசு ரத்து செய்தது.இதையடுத்து மாணவர்களுக்கு மதிப்பெண் பட்டியல் தயாரிக்கும் பணி, அவர்களது வருகைப் பதிவை பதிவேற்றும் பணி உள்ளிட்டவை தற்போது பள்ளிகளில் நடைபெற்று வருகின்றன.

இதுகுறித்து அரசு தேர்வுகள் இயக்ககம் அனைத்து பள்ளிகளுக்கும் முக்கிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. அதில், பிளஸ் 1 மற்றும் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான வருகைப் பதிவை எந்த ஒரு புகாருக்கும் இடமின்றி கவனமாக, நியாயமாக பதிவு செய்ய வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. அதேபோல் இந்தப் பணியானது மிகவும் முக்கியமான பணி என்பதாலும், மாணவர்களின் எதிர்காலம் இதில் அடங்கியுள்ளதாகவும் மிகவும் ரகசியமாக இந்தப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments