Breaking News

பல் தேய்க்கும் டூத் பிரஷ்ஷால் இவ்வளவு ஆபத்து இருக்கிறதா? இது தெரிந்தால் இனி அந்த தவறை செய்யவே மாட்டீர்கள்

பல் தேய்க்கும் டூத் பிரஷ்ஷால் இவ்வளவு ஆபத்து இருக்கிறதா? இது தெரிந்தால் இனி அந்த தவறை செய்யவே மாட்டீர்கள்
பல் துலக்கும் டூத் பிரஷ், நம் உடலில் தேவையில்லாத நோய்த்தொற்றை ஏற்படுத்தும் என்றால் நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள் தானே? பல் தேய்க்கும் டூத் பிரஷ்ஷை மட்டும் சுத்தமாக கழுவி வைத்தால் பத்தாது. அதை நீங்கள் வைக்கும் ஹோல்டரை எப்படி வைத்திருக்கிறீர்கள்? என்பதைப் பொறுத்தும் ஆரோக்கியம் இருக்கிறது. டூத் பிரஷ் மற்றும் அதன் ஹோல்டரை சுத்தம் செய்யும் முறையை தான் இந்த பதிவின் மூலம் பார்க்க இருக்கிறோம். வாருங்கள் பதிவிற்குள் போகலாம்.

டூத் பிரஷ் மற்றும் டூத் பிரஸ் வைக்கும் ஹோல்டர் இவைகள் பாக்டீரியாக்கள் வாழும் இடமாக இருக்கிறது. நாம் தினமும் பல் துலக்கும் போது வாயில் இருக்கும் பாக்டீரியாக்கள் சுத்தம் செய்வதற்கு டூத் பிரஷ் போராடுகிறது. அந்த டூத் பிரஷில் பாக்டீரியாக்கள் நீங்க ஒரு முறை எப்பொழுதும் சுடு தண்ணீரில் அலச வேண்டும். ஆனால் அதை செய்வதற்கு நமக்கு நேரம் இருக்காது. டூத் பிரஷ்ஷை மூடுவதற்கு மூடி இருக்கும். அதனை தவறாமல் பயன்படுத்துவது ஆரோக்கியத்திற்கு நல்லது.

நாம் டூத் பிரஷ்ஷை பயன்படுத்திவிட்டு ஹோல்டரில் வைத்து விட்டு சென்று விடுவோம். ஆனால் அதன் பிறகு கொசுக்களும், ஈக்களும் கண்ட இடங்களில் அமர்ந்து விட்டு, அந்த பிரஷில் வந்து உட்காரும். அதனால் தான் பிரஷ்ஷை மூடி வைப்பது எப்பொழுதும் நல்லது. அது போல் டூத் பிரஷ் வைக்கும் ஹோல்டர்கள் மாதம் இரண்டு முறையாவது சுத்தம் செய்து வைக்க வேண்டும். ஆனால் அதனை வருடம் ஒருமுறை கூட சுத்தம் செய்யாதவர்கள் எவ்வளவோ பேர் உங்களில் இருக்கலாம். இதனால் வரும் ஆபத்துகள் ஏராளம்.

டூத் பிரஷ் ஹோல்டர்கள் சுத்தம் செய்யாமல் அப்படியே இருப்பதால் அதில் பாக்டீரியாக்கள் இனப்பெருக்கம் செய்ய ஆரம்பித்துவிடும். இதனால் காலப்போக்கில் அழுக்குகள் படிந்து விடும். அதில் இரண்டு டூத் பிரஷ்களை கொண்டு போய் வைக்கும் பொழுது அதனால் பரவும் பாக்டீரியாக்களின் தாக்கம் நமக்கு தீங்கை விளைவிக்கும். வீட்டிலிருக்கும் எந்த ஒரு பொருளும் சுத்தமாக வைத்திருப்பது ஆரோக்கியத்திற்கு நல்லது. ஆனால் இந்த சில பொருட்களை எல்லாம் நாம் கண்டு கொள்வதே இல்லை.

மாதக்கணக்கில் அப்படியே கை படாமல் வைத்திருக்கிறோம். இந்த டூத் பிரஷ் ஹோல்டரை மாதம் இரண்டு முறை வெதுவெதுப்பான தண்ணீரில் 10 நிமிடங்கள் ஊறவைக்க வேண்டும். பின்னர் பாத்திரம் கழுவும் லிக்விட்களை பயன்படுத்தி லேசாக தேய்த்தால், அடியில் இருக்கும் அழுக்குகளை எல்லாம் நீக்கிவிடும். பின்னர் வெயிலில் சிறிது நேரம் காய வைத்து எடுத்து மீண்டும் மாட்டிக் கொள்ளலாம்.

அதில் டூத் பேஸ்ட் ஒட்டி இருந்தால் அதனை தேய்த்து விட்டால் அதிலிருந்து வரும் நுரை ஹோல்டரை சுத்தம் செய்து விடும். பாக்டீரியா தொற்று ஏற்படாமலிருக்க பேக்கிங் சோடா மற்றும் வினிகர் கலந்த கலவையில் மாதம் ஒரு முறையாவது டூத் பிரஷ் மற்றும் டூத் பிரஷ் வைக்கும் ஹோல்டரை ஊற வைத்து பின்னர் சோப்பை பயன்படுத்தி சுத்தம் செய்து வெயிலில் காய வைத்து உபயோகப்படுத்தலாம்.

பேக்கிங் சோடா துர்நாற்றத்தையும், வினிகர் பாக்டீரியாக்களை அழிக்கும் தன்மையும் கொண்டுள்ளது. இதனால் இந்த இரண்டு பொருட்களும் வீட்டில் எப்பொழுதும் வைத்திருப்பது மிகவும் நல்லது. இதன் விலை ஒன்றும் அவ்வளவு அதிகமானதும் அல்ல. பாத்திரம் தேய்க்கும் சிங்க்குகளில் இருந்து வரும் கரப்பான்பூச்சி தொல்லைகளை நீக்க இந்த இரண்டு பொருட்களையும் கலந்த தண்ணீரை ஊற்றி சுத்தம் செய்வது பலன் தரும். டூத் பிரஷ் மட்டுமல்ல, சோப் வைக்கும் ஹோல்டர் மற்றும் சோப்பு டப்பாக்களையும் கூட மாதம் ஒருமுறை சுத்தம் செய்து உபயோகப்படுத்துவது நலம் தரும் செயலாகும். இதனை நீங்களும் கடைபிடித்து ஆரோக்கியம் பெறுங்கள்.




No comments