அதிமுக அவைத் தலைவர் மதுசூதனன் காலமானார்
அதிமுக அவைத் தலைவர் மதுசூதனன் காலமானார்
அதிமுக அவைத் தலைவரும், மூத்த அரசியல் தலைவர்களில் ஒருவருமான மதுசூதனன்
உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 81.
கடந்த ஜூலை மாதம் உடல் நலக்குறைவால் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில்
அனுமதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த அவர்
பிற்பகலில் உயிரிழந்தார்.
வெள்ளிகிழைமை மாலை மூலக்கொத்தலம் மின் மயானத்தில் அவரது உடல் தகனம் செய்யப்பட
உள்ளது. எம்ஜிஆரின் தீவிர விசுவாசியாக இருந்த மதுசூதனன், ஆர்கே நகர் தேர்தலில்
1991 ஆம் ஆண்டில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்.
ஜெயலலிதாவின் முதல் அமைச்சரவையில் கைத்தறித்துறை அமைச்சராக இருந்தவர். 2007ஆம்
ஆண்டு முதல் அதிமுகவின் அவைத் தலைவராக மதுசூதனன் இருந்து வந்தார்.
மதுசூதனன் மறைவையொட்டி அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை
ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட இரங்கல் செய்தியில் வருகிற 7 ஆம்
தேதி வரை 3 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என்றும், அதிமுக கொடி
அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.