Breaking News

ஆசிரியா் தகுதித்தேர்வு ஒத்திவைப்பு!!மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் அறிவிப்பு

ஆசிரியா் தகுதித்தேர்வு ஒத்திவைப்பு!!மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் அறிவிப்பு

    நாடு முழுவதும் கரோனா தொற்று தீவிரமடைந்து வரும் நிலையில் வரும் ஜூலை 5-ஆம் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த மத்திய ஆசிரியா் தகுதித்தேர்வு ('சி-டெட்') தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. சிபிஎஸ்இ, நவோதயா போன்ற மத்திய அரசுக்கு உள்பட்ட பள்ளிகளில் ஆசிரியராகப் பணியாற்றுவதற்கான மத்திய ஆசிரியா் தகுதித் தேர்வு (சி-டெட்) வரும் ஜூலை 5-ஆம் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

   நாடு முழுவதும் கரோனா தொற்று தீவிரமடைந்து வரும் நிலையில் இந்தத் தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) தெரிவித்துள்ளது. இதைத் தொடா்ந்து தற்போதுள்ள நிலைமை சீராகி தேர்வு நடத்துவதற்கு உகந்த சூழல் உருவாகும்போது 'சி-டெட்' தேர்வு நடைபெறும் தேதி குறித்து அறிவிப்பு வெளியாகும். ஜூலை 5-ஆம் தேதி நடைபெறவிருந்த 'சி-டெட்' தேர்வுக்கு விண்ணப்பித்திருந்த தேர்வா்கள் அது தொடா்பாக அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து அறிய இணையதள முகவரியில் தொடா்பு கொள்ளலாம் என சிபிஎஸ்இ செயலா் அனுராக் திரிபாதி வியாழக்கிழமை தெரிவித்துள்ளாா்

No comments