Breaking News

இந்தியாவில் டிக் டாக்கின் இடத்தைப் பிடிக்க வரும் இன்ஸ்டாக்ராமின் ரீல்ஸ்

இந்தியாவில் டிக் டாக்கின் இடத்தைப் பிடிக்க வரும் இன்ஸ்டாக்ராமின் ரீல்ஸ்
இந்தியாவில் தடை செய்யப்பட்டுள்ள சீன செயலியான டிக் டாக்கின் இடத்தைப் பிடிக்க, இன்ஸ்டாக்ராமின் 'ரீல்ஸ்' தயாராவதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

சீன விடியோ செயலியான டிக் டாக் சமீபத்தில் இந்திய அரசால் தடை செய்யப்பட்ட 59 சீன செயலிகளில் ஒன்றாகும். இதற்கு சரியான ஒரு மாற்றினை இந்திய ரசிகர்கள் தற்போது ஆர்வமாகத் தேடி வருகின்றனர்.
தற்போது பேஸ்புக்கால் நிர்வகிக்கப்படும் இன்ஸ்டாக்ராம் செயலியானது கடந்த வருடம் 'ரீல்ஸ்' என்னும் வசதியை அறிமுகம் செய்தது. டிக்டாக்கில் உள்ளது போன்றே இதிலும் பயனாளர்கள் 15 நொடி விடியோ ஒன்றை, தகுந்த பின்னணி இசை போன்றவற்றுடன் உருவாக்கி பகிரலாம். சோதனை அடிப்படையில் முதலில் பிரேசிலில் அறிமுகமான இந்த வசதியை பின்னர் பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகளுக்கும் இன்ஸ்டாக்ராம் விரிவுபடுத்தியது.

இந்நிலையில் இந்தியாவில் டிக் டாக்கின் இடத்தைப் பிடிக்க, இன்ஸ்டாக்ராமின் 'ரீல்ஸ்' தயாராவதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
இதுதொடர்பாக பேஸ்புக் செய்தித்தொடர்பாளர் ஒருவர் செய்தி நிறுவனத்திடம் பேசுகையில், 'மேம்படுத்தப்பட்ட ரீல்ஸ் வசதியினை இன்னும் சில நாடுகளில் அறிமுகம் செய்யலாம் என்று திட்டமிட்டுள்ளோம். ரீல்ஸ் பயனாளர்களுக்கு நல்ல பொழுதுபோக்காகவும், தங்களது திறமையினை வெளிப்படுத்த வாய்ப்பு தருவதாகவும் அமையும். எப்போது இது அறிமுகம் செய்யப்படுகிறது மற்றும் எந்த நாடுகளில் எல்லாம் என்பது குறித்து தற்சமயம் திட்டமிடப்படவில்லை' என்று தெரிவித்தார்.

No comments